அன்புள்ள சாய் அன்பர்களே!

நாம் சேர்த்து வைத்த, நாம் செய்கின்ற, கர்மாக்களுக்கு ஏற்றவாறே வாழ்க்கையில் சுக துக்கங்கள் நம்மை வந்தடையும், வரும் இன்ப துன்பங்களை, நாம் அனுபவித்தே ஆகவேண்டும். ஆனாக் கருணை உள்ளம் கொண்ட "பாபா" இச்சம்சார சாஹரம் என்னும் துன்பக் கடலிலிருந்து நம்மை விடுவித்து நல்வழி படுத்தவே அவதரித்துள்ளார். பாபா ஒருவர் மட்டுமே நம் கர்மாக்களை எடுத்டு விடுவேன் என்று வாக்கு தானம் செய்திருக்கிறார். சாயியின் வார்த்தை கர்மவினைகளில் வீர்யத்தை தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தது. ஆதலால் நமது துன்பம் தீர "சீரடி சாய் பிரார்த்தனா சமாஜ்" மூலம் கூட்டுப்பிரார்த்தனை செய்ய பாபா வாய்ப்பளித்திருக்கிறார்.

இப்படி நாம் செய்யும் கூட்டுப்பிரார்த்தனை மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் மனங்களில் உள்ள துன்பங்களை களைவதற்கும். ஒருவர் முகம் மற்றவர் அறியாமல் செய்யும் பிரார்த்தனையானது, சாயியின் பாதங்களை சிதறாமல் சென்றடைவதால் அந்த பக்தர்களின் நோய், காரியதடை, வியாபார மேன்மை, திருமணம், குழந்தைபேறு, உத்யோகம் போன்ற லோகாயத தேவைகளை சாய் ஆசிர்வதித்து பூர்த்தி செய்கிறார். கோரிக்கை எதுவாகினும் அது எமக்கு சாமான்யமே என்ற பாபாவின் வாக்கு நிச்சயம் ஆனது. பாபாவிடம் மனம் விட்டு பேசுவதே பிரார்த்தனை - சாயி நாமமே, நம்வாழ்வில் வழிக்காட்டியாகும். இதை அறியாமல் துன்பமும், பிரச்சனைகளும், நம்மை சூழும் போது, நாம் கடவுளை நோக்கி ஓடுகிறோம். நாம் சாயியை வாரம் ஒரு நாள் தரிசித்தால் போதும் என்ற எண்ணம் தவறானது. சாய் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். நாம் உணவருந்தும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் சாயிக்கு அர்ப்பணம் செய்கிறோமா? என்று எண்ணிப்பார்த்தல் வேண்டும். கடவுளுக்கும், நமக்கும் நெருக்கம் குறையும் போது, எதிர்மறையான எண்ணங்களை (Negative Energy) எதிர்க்க முடிர்க்க முடிவதில்லை. கூட்டுப்பிரார்த்தனை பேராயுதமானது. சாயியை நம்மை நோக்கி ஓடி வரச் செய்கிறது. நாமும் அவரை நெருங்க முடிகிறது. அவர் தமது பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்கிறார். ஆகையால் சாயி பக்தர்கள், பிரார்த்தனை செய்வதை தமது முக்கிய கடமைகளுள் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். கூட்டுப்பிரார்த்தனை மூலம் பல நற்காரியங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.

தினமும் சூரிய உதயம், உச்சி வேளை, அந்தி வேளை போன்ற முக்காலங்களிலும், சில வினாடிகள் நம் அன்றாட செயல்களின் ஊடே மனதில் தியானம் செய்வதை வழக்கமாக கொள்தல் வேண்டும். உண்மையான நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பரிபூரண சரணாகதியுடன் பிரார்த்தனை செய்தால் எல்லா துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். சாயி சாயி என்று சதா ஞாபகமூட்டி கொள்வதே நம் தியானமாகும். இன்றைய நவீனயுகத்தில் பக்தர்களிடம் நம்பிக்கை ஊட்டவும், எல்லா துன்பங்களுக்கும் தீர்வு காணவும் நமக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்யவும், பிறருக்காக நாம் பிரார்த்தனை செய்ய நமக்கு மன பக்குவத்தை அருளும்படி பாபாவிடம் கேட்கவும் "சீரடி சாய் பிரார்த்தனா சமாஜ்" உதவுகிறது. பிறருக்காவே (பக்தர்களுக்காக) நம் பிரார்த்தனை என்ற குறிக்கோளை உடைய சாயிபாபாவே, ஒவ்வொரு பக்தர்களின் சொரூபமாக இருந்து கூட்டுப்பிரார்த்தனையை நடத்துகிறார். சாயியின் ஆசிர்வாதம் மற்றும் அற்புதங்களை பெற நீங்களும் வாருங்கள். நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள், உங்கள் கோரிக்கை நிறைவேறும், எண்ணங்கள் ஈடேறும், எடுத்த காரியம் வெற்றி பெறும், மாயை விலகும், "சாயிகுரு" வடிவம் காட்சி கிடைக்கும். பரிபூரண சரணாகதி அடைந்தால் எந்த துன்பமும் வராது.    பாபா சொல்கிறார்...

"என்னுடைய கருவூலம் நிறைந்திருக்கிறது" என்னிடம் வருபவர்களெல்லாம் கொடு, கொடு என்கிறார்கள். நான் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் பெற கூடிய தகுதி அவர்களுக்கு இருக்கின்றதா என்று பார்க்க வேண்டியுள்ளது - சீரடி சாய்பாபா ஆகையால் கூட்டுப்பிரார்த்தனையின் மூலம் அந்த தகுதியை வளர்த்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி

நம்பிக்கை பொறுமை ...  உங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க...

இங்ஙனம் சாய்சேவையில்

திருவான்மியூர் கோயில் முகவரி

குருஜி ஆச்சார்யாஜி

ஷீரடி சாய் பிரார்த்தனா சமாஜ்,

No.13/8,20-ஆம் கிழக்கு தெரு, காமராஜ் நகர், திருவான்மியூர்,

சென்னை - 600041. தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி | மின்னஞ்சல் | வலைத்தளம்

044 4323 5002 | +91 94448 95002

shirdisaiprarthanasamaj@gmail.com

www.shirdisaiprarthanasamaj.com

கும்பகோணம் கோயில் முகவரி

குருஜி ஆச்சார்யாஜி

கர்ம விமோச்சன சாயீபாபா ஆலயம்,

85/20, 2-ஆம் குறுக்குத் தெரு, ஸ்ரீநகர் காலனி,

கும்பகோணம் - 612 001. தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி | மின்னஞ்சல் | வலைத்தளம்

0435-2410146 | +91 95512 95002 | +91 99623 35002

shirdisaiprarthanasamaj@gmail.com

www.shirdisaiprarthanasamaj.com